12 ஆயிரம் கஞ்சா செடிகளுடன் இருவர் கைது!

தனமல்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊருஹோரா பலஹருவா பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில், கஞ்சா பயிர் செய்கையில் ஈடுபட்டிருந்த இருவர் விசேட அதிரடிப்படையினரால் 12, 017 கஞ்சா செடிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது கஞ்சா தோட்டம் ஒன்றில் 5 அடி ஒரு அங்குலம் உயரமுள்ள 6, 257 கஞ்சா செடிகளுடன் ஹம்பேகமு பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரும் , 2அடி 5 அங்குலம் உயரமுள்ள 5, 760 கஞ்சா செடிகளுடன் ஹம்பேகமு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரும் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

ராமு தனராஜா

Related Articles

Latest Articles