12 நண்பர்களை கொன்ற பெண் கைது

தாய்லாந்தில் தனது 12 நண்பர்களுக்கு சயனைட் விசத்தைக் கொடுத்து கொலை செய்த சந்தேகத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நண்பர்களின் மரணம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சரரட் ரங்சிவுதபோன் என்ற பெண் பாங்கொக்கில் வைத்து கடந்த செவ்வாயன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாத ஆரம்பத்தில் சரரட்டுடன் சுற்றுலா சென்ற நண்பர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினர் சரரட் மீது சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பணத்துக்காக அவர் இந்தக் கொலைகளைச் செய்திருப்பதாக பொலிஸார் குற்றம்சாட்டியுள்ளனர். எனினும் சரரட் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். தாய்லாந்து நிர்வாகம் அவருக்கு பிணை மறுத்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் சயனைட் ஊட்டப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் அவரது உடைமைகள் காணாமல்போயுள்ளன. 2020 தொடக்கம் இவ்வாறான கொலைகள் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் சரரட்டின் முன்னாள் துணைவர், இரு பெண் பொலிஸாரும் அடங்குகின்றனர். இவ்வாறு கொல்லப்பட்ட அனைவரதும் பணம் மற்றும் ஆபரணங்கள் காணாமல்போயிருப்பதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles