வைத்தியசாலை, பங்குசந்தை கட்டிடம்மீது ஈரான் தாக்குதல்!

 

ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியுள்ளது.

மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில் நான்கு இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேலின் பிரபல வைத்தியசாலையான சொரோகா வைத்தியசாலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தலைநகர் டெல் அவிவில் உள்ள பங்குச்சந்தை கட்டிடம் தாக்குதலுக்கு உள்ளானது.
வைத்தியசாலை மீதான ஈரானின் தாக்குதல், இஸ்ரேல் அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஈரான் போர்க்குற்றம் புரிந்துள்ளது” என்று இஸ்ரேல் சுகாதார அமைச்சர் ஆவேசமாக தெரிவித்தார்.

ஈரானின் இன்றைய தாக்குதலில் மட்டும் 32 இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளதாகவும், இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles