’13’ இல் உள்ள பொலிஸ் அதிகாரம் ஆபத்தானது – பதறுகிறார் கம்மன்பில

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரமானது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் வாக்குகளை ஜனாதிபதி இலக்கு வைத்துள்ளார். இதற்காகவே 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியுள்ளார்.

இது தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்காகவே கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரிவினைவாதம் செயற்படும் நிலையில், பொலிஸ் அதிகாரம் பற்றி பேசுவது ஆபத்தானது.

13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து பொலிஸ் அதிகாரம் நீக்கப்பட வேண்டும்.” – என்றார்.

 

 

 

 

Related Articles

Latest Articles