13 ஐ முழுமையாக அமுலாக்குவதற்கான பணி ஆரம்பம்!

அரசமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

” தமிழ்த் தலைவர்களுடனான பேச்சு கள் முன்னேற்றகரமாக இடம்பெறுவதாகவும் பிரச்சினைகளுக்கு தீர்வினை அளிக்க
வேண்டும் என்பதில் அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

” நீடித்துக்கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காண வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. குறிப்பாக இது விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகுந்த கரிசனையுடன் இருக்கின்றார்.

அந்த வகையில், தற்போது 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.

குறித்த சட்டத்தினை அமுலாக்குவதில் உள்ள நடைமுறைப்பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக கவனத்தில் கொள்ளப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles