’13’ குறித்த ஜே.வி.பியின் நிலைப்பாடு அறிவிப்பு! பொலிஸ் அதிகாரத்துக்கு ஆதரவு இல்லை!!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அரசின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாடு என்னவென்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க.

இலங்கையில் பொலிஸ்துறை முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதால் பொலிஸ் அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் தமது கட்சி உடன்படாது எனவும், காணி அதிகாரம் பற்றி பேச்சு நடத்துவதற்கு தயாராகவே உள்ளது எனவும் அநுரகுமார திஸாநாயக்க அறிவித்தார்.

” அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தற்போது வடக்கில் உள்ள கட்சியோ அல்லது தெற்கில் உள்ள கட்சியோ விவாதத்தை ஆரம்பிக்கவில்லை. மாறாக ரணில் விக்கிரமசிங்கதான் ஆரம்பித்துவைத்தார். வடக்கில் உள்ள வாக்குகளை இலக்கு வைத்து அரசியல் முன்னெடுக்கப்பட்டுள்ள தந்திரோபாய அரசியல் நகர்வே இதுவாகும்.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

” ஜனாதிபதி தேர்தலை நடத்துவதிலேயே ரணில் தீவிரமாக உள்ளார். ஏனெனில் ஏனைய உள்ளாட்சி தேர்தலா, மாகாணசபைத் தேர்தலோ நடத்தப்பட்டால் அவற்றின் பெறுபேறுகள், தமக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியைக்கூட பெற்றுக்கொடுக்காது என்பது ரணிலுக்கு தெரியும். எனவே, 13 ஐ முழுமையாக அமுலாக்ககூடிய தலைவர்தான்தான் என்ற மாயையை உருவாக்கி அதன்மூலம் வாக்கு வேட்டை நடத்துவதற்கான அரசியல் உபாயமாகவே, 13 குறித்த விவாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

எனவே, 13 தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென்பதை முதலில் ஜனாதிபதி அறிவிக்க வேண்டும்.

இரண்டாவது, மாகாணசபைத் தேர்தலை நடத்திய பிறகு 13 பிளஸா அல்லது அதிகார குறைப்பா என்பது பற்றி பேசலாம்.

பொலிஸ் அதிகாரம் வழங்ககூடாது. ஏனெனில் இலங்கையில் பொலிஸ் என்பது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணசபை முதல்வராக பிரசன்ன ரணதுங்க இருந்தால், அவர் போன்றவருக்கு பொலிஸ் அதிகாரம் சென்றால் என்ன நடக்கும்? இது வடக்கில் அல்ல தெற்கில் பிரச்சினையாக அமையும்.

காணி அதிகாரம் பற்றி கதைக்கலாம். தொல்லியல் இடங்கள் மத்திய அரசின்கீழ்தான் இருக்கும். மகாவலி, வனஜீவராசிகள் திணைக்களத்துக்குரிய காணி, ரயில்வே திணைக்களத்துக்குரிய காணி என்பன அரசின்கீழ்தான் இருக்கும். அதேபோல வடக்கில் படையினர் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.” – எனவும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles