13 முழுமையாக அமுலாக வேண்டும்! கொழும்பிடம் டில்லி இடித்துரைப்பு!!

” அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு இடம்பெறவேண்டும் என இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எம்மிடம் குறிப்பிட்டார்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் வதிவிடத்தில் நடைபெற்றது.

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் தமிழர் தாயகத்தில் அரங்கேறும் அடக்குமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles