’13’ இன் தலைவிதி நிபுணர் குழுவின் கைகளில்!

புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவே, 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் முன்மொழிவை முன்வைக்கும்.அதன்பின்னரே அரசியல் ரீதியிலான தீர்மானம் எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதயகம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்றது.

இதன்போது அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” வடக்கு,கிழக்கில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வாகவே மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மாகாணசபைகள் இயங்கவில்லை. ஆனாலும் அவற்றுக்கு தேர்தலை நடத்துமாறு வடக்கு, கிழக்கில் இருந்து எவரும் குரல் எழுப்பவில்லை.

மாகாணசபை முறை நீக்கப்படுமா, இல்லையா என்பது தொடர்பில் என்னால்கூறமுடியாது. அது தொடர்பான பரிந்துரையை நிபுணர்குழுவே முன்வைக்கும். அதன்பின்னரே அமைச்சரவையில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும்.

13 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதா, இல்லையா என்பது தொடர்பில் அமைச்சரவையில் எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. புதிய அரசியலமைப்பு இன்னமும் உருவாக்கப்படவும் இல்லை.

அவ்வாறு இயற்றப்பட்ட பின்னரே சட்டரீதியாக, இராஜதந்திர ரீதியாக எழும் சிக்கல்கள் பற்றி அறியக்கூடியதாக இருக்கும்.
நாட்டிலுள்ள முதன்மையான நிபுணர்கள்தான் அரசியலமைப்பை இயற்றும் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, 13 தொடர்பிலும் விரிவாக ஆராய்ந்து பரிந்தரைகளை முன்வைக்கப்பார்கள். அதன்படி அரசியல் தீர்மானம் எடுக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles