அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என்ற தென்னிலங்கை கட்சிகளின் உறுதிமொழிகளை மீண்டும் நம்புவதற்கு வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தயாரில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மேஜர் சுதர்ஷன தெனிபிடிய தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும், பொலிஸ், காணி அதிகாரங்கள்கூட வழங்கப்படும் என்று வடக்குக்கு சென்று அநுரகுமார திஸாநாயக்கவும், சஜித் பிரேமதாசவும் உறுதியளிக்கின்றனர். தேர்தல் நெருங்குவதாலேயே இவ்வாறு உறுதிமொழி வழங்கப்படுகின்றது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை எதிர்க்கின்றனர்.
இவர்கள் என்ன கூறினாலும் மீண்டும் தமிழ் மக்கள் ஏமாறமாட்டார்கள். வடக்கு, கிழக்கு மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்து, அபிவிருத்தியை ஏற்படுத்திய தலைவரே மஹிந்த ராஜபக்ச.” – என்றார் மேஜர் சுதர்ஷன தெனிபிடிய .
