அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், ஜனாதிபதி தலைமையில் நாளை நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பங்கேற்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
” அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு. எனினும், பொலிஸ், காணி அதிகாரங்களை பகிர்வது குறித்து உரிய பொறிமுறை அவசியம்.
சர்வக்கட்சி மாநாட்டில் சுதந்திரக்கட்சி பங்கேற்கும். அரசால் முன்னெடுக்கப்படும் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு வழங்கப்படும்.” – என்றார்.
