மட்டக்களப்பு அரசடி பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர், தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு அரசடி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியே இந்த தவறான முடிவை எடுத்துள்ளார்.
தாய், தந்தை இருவரும் சம்பவ தினத்தன்று இரவு 7 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த நிலையில், சகோதரியுடன் இருந்த சிறுமி ணுழழஅ வகுப்பில் அறையில் கல்விக் கற்றுக் கொண்டிருந்ததாகவும், அத்தருணம் சகோதரி குளிக்கச் சென்று திரும்பி வந்தபோது சிறுமி அறையில் உயிரை மாய்த்துக் கொண்டிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு சடலத்தை பிரதேச பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டதை அடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் இந்த முடிவை எடுப்பதற்கான காரணம் குறித்து பொலிசார் மற்றும் மாவட்ட பெண்கள் சிறுவர் பாதுகாப்புப் பொலிசார் தனித்தனி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.










