அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” 13 ஐ முழுமையாக அமுலாக்க இடமளிக்கமாட்டோம். அதனை தோற்கடிக்க எல்லா வழிகளிலும் போராடுவோம்.” – எனவும் விமல் குறிப்பிட்டார்.
அதேவேளை, 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையையும் அவர் வரவேற்றார்.










