அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் எம்.பி.க்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதுமானதல்ல என்றும் இது நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.