விசேட அதிரடிப்படையினர் உட்பட 2 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 2ஆவது கொரோனா அலைமூலம் இதுவரை 135 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. சுமார் 300 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிப்பில் உள்ளனர். அத்துடன், விசேட அதிரடிப்படையினர் உட்பட 2 ஆயிரம் பேர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
களனி, இராஜகிரிய மற்றும் களுபோவில ஆகிய விசேட அதிரடி படை முகாம்களில் உணவு பிரிவுக்கு பொறுப்பாக உள்ளவர்கள், பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுவந்ததாலேயே அங்கு கொரோனா பரவியது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். முகாம்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.