கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக முழு நாட்டையும் 14 நாட்களுக்கு முடக்குமாறு ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கான விஞ்ஞானபூர்வமான காரணங்களை முன்வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அவர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார் என தெரியவருகின்றது.
அரச வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களின் சங்கங்களும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.










