14 ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்

கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 14 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இப்போராட்டத்துக்கு நாளாந்தம் ஆதரவு வலுத்துவருகின்றது.

தொழில் நிபுணர்கள், கலைஞர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் என பலர் நாளாந்தம் பங்கேற்று, இளைஞர்களுக்கு ஆதரவை தெரிவித்துவருகின்றனர்.

போராட்டக்களத்தில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்த தேரர், உடல் நல பாதிப்பால் இன்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

Related Articles

Latest Articles