லுணுகலை 27 ஆம் கட்டை பகுதியில் 14 வயது பாடசாலை மாணவியொருவர் காணாமல்போயுள்ளார். இது தொடர்பில் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவியின் பெற்றோர், தங்களால் நடத்தி செல்லப்படும் கடையொன்றுக்கு நேற்று சென்றுள்ளனர். அதன்பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் வீடு சென்று பார்த்தபோது, சிறுமி வீட்டில் இருக்கவில்லை என லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்
சிறுமியை தேடும் நடவடிக்கையில் லுணுகலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்
-ராமு தனராஜா-
