140 லீற்றல் பெற்றோலுடன் ஆட்டோ ஓட்டுநர் கைது!

பதுளை, ஹாலி- எல நகரிலிருந்து, ஊவா கெட்டவெளப் பகுதிக்கு சென்ற ஆட்டோவை, இடைமறித்து சோதனைக்குட்படுத்தியபோது 140 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டது.

குறித்த ஆட்டோ ஓட்டுநர், கடந்த சில மாதங்களாக , அதிக விலைக்கு எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், இன்று, பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles