13 வயது சிறுமியை வன்கொடுமைக்குட்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அச்சிறுமியின் தந்தை, காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். மேலும் ஆறு பேரை கைது செய்யவேண்டியுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
