பசறை, யூரி தோட்ட தொழிலாளர்கள் 15 கோரிக்கைகளை முன்வைத்து இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இவற்றில் 10 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்ட உயர் அதிகாரி ஒருவர் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
பசறை யூரி தோட்ட காரியாளய பிரிவு தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஷ் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து அவரின் ஆலோசனையின் பிரகாரம் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பசறை பிராந்திய இயக்குனர் நல்லையா தலைமையிலான குழுவினர், யூரி காரியாலய பிரிவிற்கு சென்று தோட்ட நிர்வாகத்துடன் பேச்சு நடத்தினர்.
தொழிலாளர்களின் 10 கோரிக்கைகளை தான் தீர்ப்பதாக தோட்ட உயர் அதிகாரி உறுதியளித்துள்ளார்.
ஐந்து கோரிக்கைகளை கம்பெனி உயர் அதிகாரியுடன் பேச்சு நடத்தி தீர்த்துக் கொள்ளும்படி தோட்ட உயர் அதிகாரி கூறியதை தொடர்ந்து தோட்ட தொழிலாளர்களின் பணி பகிஷ் கரிப்பு கைவிடப்பட்டது.
இது தொடர்பான ஐந்து கோரிக்கைகளையும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வை பெற்றுத்தர எதிர்பார்ப்பதாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் மாநில இயக்குனர் தெரிவித்தார்.
ராமு தனராஜா