2024 ஜனவரி மாதம் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5 ஆயிரத்து 428 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 1,122 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பை அடுத்ததாக யாழ். மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ். மாவட்டத்தில் 1076 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
