கல்கிசையில் 15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளத்தினூடாக பாலியல் நடவடிக்கைகளுக்காக கொள்வனவு செய்தமை தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் வங்கி முகாமையாளர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குறித்த சிறுமியின் தொலைபேசியின் தரவு பகுப்பாய்வு அறிக்கை தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் 30 இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
