150 அடி பள்ளத்தில் வீழ்ந்து வேன் விபத்து – இருவர் படுகாயம்!

ஹப்புத்தளை புற நகர்ப் பகுதியில் ஹப்புத்தளை – கொழும்பு பிரதான வீதியில் இன்று 14-12-2021 அதிகாலை 4 மணியளவில் வேன் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

வேன் சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து, சீறிய பாதையொன்றில் தடம்புரண்டுள்ளது.

இவ்விபத்தில், வேனின் சாரதியும், பயணித்த ஒருவரும் கடுங்காயங்களுக்குள்ளாகி, ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் அவ்விருவரும் தியத்தலாவை அரசினர் மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளதாக, வைத்தியர்கள் தெரிவித்தனர்.

ஹப்புத்தளைப் பொலிசார் இவ்விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். வேனின் சாரதியின் நித்திரைக் கலக்கமே, இவ் விபத்திற்கு காரணமென்று தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles