புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் இறுக்கமான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ள ஹொங்கொங் நிர்வாகம் சுமார் 15 ஆயிரம் பேரை நாடு கடத்தக்கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட இந்த இறுக்கமான சட்ட விதிகளைத் தொடர்ந்து அங்கு தங்கியுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்தியில் தாம் நாடு கடத்தப்படுவோம் என்ற அச்ச நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மேன் முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் நபர்களை நாடு கடத்தவும் இச்சட்ட விதிகள் சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினருக்கு அதிகாரமளித்துள்ளது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது முதல் 27 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 1100 பேர் உடனடியாக நாடு கடத்தப்படும் நிலைக்கு முகம் கொடுத்துள்ளனர்.
