சட்டவிரோதமான முறையில் 153 ஆமை முட்டைகளை வைத்திருந்தார் எனக் கூறப்படும் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரத்கம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் ரத்கம பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக உள்ள கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து 153 ஆமை முட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடந்துவ வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
