16 வயது மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ரிதிகம-ஓகொடபொல-மஹயாய பிரதேசத்தில் உள்ள கால்வாயில் நீராடச் சென்ற பாடசாலைக் குழுவொன்றில், ஒரு மாணவன் நீரில் மூழ்கியதில் ஆபத்தான நிலையில் கோனியாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 16 வயதுடைய பொல்கொல்ல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாணவர்கள் கொகரெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு விளையாட்டு போட்டிக்காக சென்று விட்டு லொறியில் திரும்பி வந்து கொண்டிருந்த போது இந்த கால்வாயில் நீராடுவதற்காகச் சென்றுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்திலேயே மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி இவ்வாறு உயிரிழந்ததாகவும், பிரதேசவாசிகள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சடலம் கோனியாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (14) இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles