16 ஆம் திகதி முதல் சூறாவளி பிரசாரம் ஆரம்பம்!

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான பரப்புரை போரை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் முழு வீச்சுடன் முன்னெடுப்பதற்கு பிரதான கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர், அன்றைய தினம் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.
மறுநாள் 16 ஆம் திகதி முதல் தேர்தல் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி சஜித் பிரேமதாசவின் முதலாவது பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் குருணாகலையில் நடைபெறவுள்ளது. ஐக்கிய மக்கள் கூட்டணியில் பங்காளிக்கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்வதற்கு சஜித் தலைமையில் இவ்வாறு 100 பிரதானக் கூட்டங்கள் 25 மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் முதலாவது பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் அநுராதபுரத்தில் நடைபெறும் என தெரியவருகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கும் கூட்டம் தொடர்பான அறிவித்தல்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

Related Articles

Latest Articles