160 ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்ய முடிவு

இந்தியாவிலிருந்து 160 ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்ய ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

ரயில்களில் நெரிசலை குறைக்கும் நோக்கில், புதிய பெட்டிகளை கொள்வனவு செய்ய தீர்மானித்ததாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

அதற்கமைய, ஏற்கனவே 50 ரயில் பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஏனைய பெட்டிகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles