165 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் அடங்கிய ஏழு பொதிகளை இலங்கை சுங்க அஞ்சல் மதிப்பீட்டுக் கிளை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த பொதிகளுக்கு உரிமை கோரப்படாததால் சுங்க, தபால் திணைக்களம் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகள் நேற்று (22) பொதிகளை திறந்து வைத்துள்ளனர்.

பொம்மைகள் மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களுக்குள் மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ரூ.70,095,000 மதிப்புள்ள 4,673 கிராம் குஷ் மற்றும் ரூ.95,860,000 மதிப்புள்ள மெத்தம்பேட்டமைன் அல்லது ஐஸ் 4,009 கிராம் என போதைப்பொருள் அடையாளம் காணப்பட்டது.

போதைப்பொருளின் மொத்த  மதிப்பு ரூ.165,955,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தற்போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் வசம் உள்ளது.

Related Articles

Latest Articles