17 ஆம் திகதி கூடுகிறது பாராளுமன்றம்!

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்க தெரிவித்தார்.

இத்தினங்களில் பாராளுமன்றம் மு.ப. 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய தினங்களில் மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2307/12 மற்றும் 2308/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள், வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழ் 2308/51 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அதனையடுத்து, தனியார் உறுப்பினர் சட்டமூலமாக, பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் முன்வைத்த உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் (இல. 126) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த முன்வைத்த உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் (இல. 160) ஆகியவை இரண்டாம் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டு சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு முன்வைக்கப்படவுள்ளது.

அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் இடம்பெறவுள்ளது.

ஜனவரி 18 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை புனர்வாழ்வுப் பணியகம் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தை மேற்கொள்ள இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து நியதிச்சட்ட நிறுவனங்கள் சில தொடர்பான பாராளுமன்ற அமைச்சுசார் அலுவல்கள் பற்றிய குழுக்களின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள ஆண்டறிக்கைகள் தொடர்பான 22 பிரேரணைகள் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளன.

அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி பி.ப. 01.00 மணிக்கு நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டால் எதிர்வரும் 19 ஆம் திகதி மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் இடம்பெறவுள்ளது.
ஜனவரி 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 09.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர்ளுக்கான அனுதாபப் பிரேரணை முன்வைக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles