2021 ஆகஸ்ட் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் வீடுகளிலோ அல்லது வைபவ மண்டபங்களிலோ திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை இத்தடை அமுலில் இருக்கும் என அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று நள்ளிரவு முதல் மக்கள் ஒன்றுகூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.










