பதுளை, தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி
பயிலும் மாணவியொருவர் காணாமல்போயுள்ளார்.
இது தொடர்பில் குறித்த மாணவியின் தாயான கே. சரோஜா என்பவரால் கஹட்டருப்ப பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
17 வயது நிரம்பிய லோகேஸ்வரன் லோஜினி என்ற மாணவியே , பதுளை நகருக்கு மேலதிக வகுப்புக்கு சென்று நேற்று முதல் வீடு திரும்பவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவி பதுளை கோபோ பெருந்தோட்டத்தை சேர்ந்தவர் எனவும், மேலதிக வகுப்புக்காக எடுத்து வந்ததாக கூறப்படும் பாடசாலை புத்தகப்பை மற்றும் பாதணிகள் ஆகியன பதுளை கோபோ பகுதியில் நீர் நிலையொன்றின் அருகில் ( தெப்பக்குளம்) இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தோட்ட இளைஞர்கள் குழுவொன்று மேற்படி நீர்நிலையில் தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர். பொலிஸாரும் அங்கு விரைந்துள்ளனர். சுழியோடுகளை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராமு தனராஜா
