18 ஆம் திகதி நாடு திரும்புகிறார் பஸில்! மொட்டு – யானை உறவு தொடருமா, மறியுமா?

அமெரிக்காவில் தற்போது தங்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச எதிர்வரும் 18 ஆம் திகதி நாடு திரும்புவார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

பஸில் நாடு திரும்பிய பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும் நோக்கிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்குமாறு மொட்டு கட்சியிடம் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles