180 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட மதுபான போத்தல்களுக்கு தடை

எதிர்காலத்தில் 180 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட சிறிய மதுபான போத்தல்களுக்கு தடை விதிக்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

பயன்பாட்டிற்குப் பிறகு சுற்றுச்சூழலில் இவை வீசப்படுவதை தடுக்கும் முகமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2018 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 100 மில்லியனுக்கும் அதிகமான சிறிய போத்தல்கள் தனிநபர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை பாவனையின் பின்னர்  100 சதவீத போத்தல்கள் சுற்றுச்சூழலில் வீசப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், இந்தப் போத்தல்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் மீள்சுழற்சி செய்யப்படுவதோ அல்லது மீண்டும் அவற்றை சேகரிக்கும் செயற்பாடுகளோ முன்னெடுக்கப்படுவதில்லையெனவும் சுற்றாடல் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Latest Articles