நாடாளுமன்றத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் 196 ஆசனங்களை மக்கள் வாக்குமூலம் கைப்பற்றுவதற்காக அரசியல் கட்சிகளில் இருந்தும் சுயேச்சைக்குழுக்களில் இருந்தும் 8 ஆயிரத்து 353 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கம்பஹா மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் மற்றும் 17 சுயேச்சைக்குழுக்களில் இருந்து 902 பேர் களமிறங்கியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 18 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் மற்றும் 19 சுயேச்சைக்குழுக்களில் இருந்து 966 பேர் போட்டியிடுகின்றனர். கொழும்பு மாவட்டத்திலேயே இம்முறை அதிகளவு வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
திகாமடுல்ல மாவட்டத்தில் 42 சுயேச்சைக்குழுக்கள் போட்டியிடுகின்றன. 07 ஆசனங்களுக்காக 22 அரசியல் கட்சிகளில் இருந்தும், சுயேச்சைக்குழுக்களில் இருந்தும் 640 பேர் போட்டியிடுகின்றனர்.
மொனறாகலை மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 12 அரசியல் கட்சிகள் மற்றும் 03 சுயேச்சைக்குழுக்களில் இருந்து 135 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலில் குறைந்தளவான வேட்பாளர்கள் களமிறங்கும் மாவட்டம்.
196 பேர் மக்கள் வாக்கெடுப்பு மூலமும், 29 பேர் தேசிய பட்டியல் ஊடாகவும் சபைக்கு செல்வார்கள்.










