197 தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றி நிதி மோசடி செய்த சூத்திரதாரி! மக்களே உஷார்!

தோட்டத் தொழிலாளர்கள் 197 பேரை மாலைத்தீவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, அவர்களிடம் நிதி மோசடி செய்த நபரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

நாவலப்பிட்​டி மற்றும் கினிகத்தேனை- பிளக்வோட்டர் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சந்தித்த குறித்த சந்தேகநபர், மாலைத்தீவில் கட்டப்படும் ஹோட்டல்களுக்கு ​தொழிலாளர்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த தொழிலில் மாதம் 1 இலட்சத்து 93ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகவும் அதற்காக தரகருக்கு 30,000 ரூபாயை முதலில் செலுத்த வேண்டும் என தெரிவித்து, 197 ​தொழிலாளர்களிடம் சந்தேகநபர் நிதி சேகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் கடந்த வருடம் நவம்பர் மாதம் குறித்த தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்த சந்தேகநபர், நவம்பர் 15ஆம் திகதி மாலைத்தீவுக்கு செல்ல தயாராக இருக்குமாறும் அதற்கான மருத்துவ பரிசோதனைக்கு 12,500 ரூபாய் ​தொழிலாளிகளிடம் வசூலித்துள்ளார்.

அத்துடன் அவர்களை இரத்மலானை பகுதியிலுள்ள வைத்திய மத்திய நிலையம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று மருத்துவ சான்றிதழையும் பெற்றுக்கொடுத்த பின்னர், சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது வீட்டிலிருந்த நகைகளை அடகு வைத்தும் உறவினர்களிடம் கடன்வாங்கியே சந்தேகநபருக்கு 42,500 ரூபாயை ஒவ்வொருவரும் செலுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, சந்தேகநபரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

ரஞ்சித் ராஜபக்ச

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles