‘கொரோனா’ வைரஸ் பரவியுள்ளதா என்பதனை கண்டறிவதற்கான பிசிஆர் பரிசோதனைகளை உடன் அதிகரிக்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு,
” கொரொனா பரிசோதனைகளை அதிகரியுங்கள் என இன்று ஜனாதிபதி கூறுகிறார்.இவரென்ன மூன்று மாத உறக்கத்தில் இருந்து இன்றுதான் விழித்தாரா?
கொரொனா நோயாளிகளுடன் தொடர்பாளர்கள், இந்நாட்டில் 40,000 பேர் இருக்கிறார்கள். அவர்களை கண்டறிய உடன் பரிசோதனைகளை அதிகரியுங்கள் என மூன்று மாதங்களுக்கு முன்னரே சொன்னேன்.
அப்போது மனோ பொய் சொல்கிறார். அவரை கைது செய்யுங்கள் என ஒரு தேரர் உட்பட பலர் கத்தினார்கள்.
என்னை கைது செய்ய வரும் பொலிஸ்காரர்களை மாலை பொதூ வர்வேற்க காத்திருந்தேன். வரவில்லை.
சரி இப்போதாவது, பரிசோதனைகளை அதிகரியுங்கள். உடன் அதை செய்யுங்கள். இரண்டாம் அலை அடிக்க முன் அதை செய்யுங்கள், ஆளவந்தோரே..!” – என்றுள்ளது.