2ஆம் தவணைக்காக பாடசாலைகள் திறப்பு – வழிகாட்டல்களும் முன்வைப்பு!

2022 ஆம் ஆண்டிற்கான 2ஆம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகியது.

2021 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்ததையடுத்து, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய பாடசாலை வாரம் ஆம்பமாகியுள்ள நிலையில், பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் கூடிய புதிய சுற்றுநிருபம் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதற்கமைய, 20 மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் அனைத்து நாட்களிலும் பாடசாலைக்கு அழைக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

20 தொடக்கம் 40 வரையான மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில், மாணவர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒருவாரம் விட்டு ஒருவாரம் என்ற அடிப்படையில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென .

40-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில் மாணவர்களை சமமான எண்ணிக்கையில் 03 குழுக்களாக பிரித்து கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலைக்கு அழைக்கப்படாத மாணவர் குழுக்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள், மாற்று வழிமுறைகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு, அவர்களுக்கான பாடத்திட்டமும் பூரணப்படுத்தப்பட வேண்டுமென கல்வியமைச்சின் செயலாளரினால் மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles