களுத்துறை, நாகொட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பயாகல பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதேவேளை , அம்பாறை பிரதேசத்திலும் வீடொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.










