கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பொன்றிலிருந்து 12 வயது சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை (17) இடம்பெற்றுள்ளது.
கொழும்பு 9 பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மருதானை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தொடர் மாடியின் மேல் தளத்தில் காணப்படும் நீச்சல் தடாகத்தில் மேலும் சில சிறுவர்களுடன் குறித்த சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் அங்குள்ள திறந்த பகுதியொன்றிற்கு அருகில் சிறுவன் சென்றிருந்த நிலையில் தவறி விழுந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
