இறக்குமதி செய்யப்பட்ட 24,000 கிலோகிராம் அப்பிள் பழங்கள் தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த அப்பிள்கள் கடந்த பெப்ரவரி மாதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில் வைக்கப்பட்டிருந்த போதும், உரிமையாளர் அவற்றை பெற்றுக்கொள்ளாமையால், அவற்றை மிருகக்காட்சி சாலைக்கு வழங்க தீர்மானித்ததாக கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்தது.
2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சுமார் ஒரு இலட்சம் அப்பிள்கள் மிருகக்காட்சி சாலைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவற்றை கையளிக்கும் நிகழ்வு கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் இன்று (10) இடம்பெற்றது
