ஆஸ்திரேலிய வரலாற்றில் மிக முக்கியமான Indigenous voice referendum சட்டமூலம், சர்வஜன வாக்கெடுப்புக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசமைப்பு மறுசீரமைப்புக்கு ஆதரவு கோரும் இச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 52 வாக்குகளும், எதிராக 19 வாக்குகளும் அளிக்கப்பட்டன. குறித்த சட்டமூலத்துக்கு lower house கடந்தமாதம் ஒப்புதல் வழங்கியது.
இதன்படி 24 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் இவ்வருடத்துக்குள் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள Voice to Parliament திட்டமானது, பூர்வக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் விடங்கள் தொடர்பிலும், அதற்கான தீர்வுகள் சம்பந்தமாகவும் நாடாளுமன்றத்துக்கும், அரசுக்கும் ஆலோசனை வழங்கக்கூடிய ஒரு சுயாதீன ஆலோசனை அமைப்பாக இருக்கும்.
சர்வஜன வாக்கெடுப்புக்கான திகதி ஒக்டோபரில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.










