வீதியில் தவறவிடப்பட்டிருந்த தங்க சங்கிலியை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்த ஹட்டன் நகரிலுள்ள இரு ஆட்டோ சாரதிகளுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன.
சாமிமலை சின்ன சோலங்கந்தையைச் சேர்ந்த தம்பதியினர் நேற்று முன்தினம், இரண்டு பவுண் தங்க சங்கிலியை ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் இறங்கி சென்ற வேளையில் தவறவிட்டுள்ளனர்.
அதனைத் கண்டு எடுத்த டிக்கோயா பகுதியில் உள்ள ராமநாதன் குகேந்திரன், தம்பிராஜ் சின்ன தம்பி ஆகிய இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள், நகையை உரியவர்களிடம் கையளித்தனர்.
இவர்களது நேர்மையை பாராட்டி பணம் வழங்க முற்பட்ட போது அவர்கள் பணம் வாங்க மறுத்து விட்டனர்.
மஸ்கெலியா நிருபர்