20 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற இந்தியப் பெண்

2021 ஆண்டுக்கான உலக அழகி மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவின் ஹர்னாஸ் கவுர் சந்து வென்றார்.

 

70ஆவது மிஸ் யுனிவர்ஸ் போட்டி இஸ்ரேலின் ஈலாட் நகரில் நடைபெற்றது. இதில் தென்னாபிரிக்கா, பரகுவே அழகிகளை வீழத்தி பஞ்சாப்பைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார்.

ஹர்னாஸ் கவுருக்கு முன்னாள் மிஸ் யுனிவர்ஸான மெக்சிகோவின் எண்ட்ரியா பட்டம் சூட்டினார்.

ஏற்கெனவே லாரா தத்தா 2000-ல் வாகை சூடிய நிலையில் 20ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் ஹர்னாஸுக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles