’20’ இற்கு போர்க்கொடி! சஜித் அணியின் ’19 பிளஸ்’ திட்டம்!!

” ஜனநாயகத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முன்வைக்கப்படவுள்ள மரணப்பொறியான ’20’ ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கான ‘ஜனநாயகப் போராட்டம்’ உள்நாட்டு சக்திகளின் பங்களிப்புடன் நாட்டுக்குள்ளேயே முன்னெடுக்கப்படும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.

’20’ ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக ராஜித சேனாரத்ன தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மக்களுக்கான ஆட்சியை முன்னெடுக்கவேண்டிய யுகத்தில் தனிநபரின்கீழ் அதிகாரங்களைக் குவிப்பதற்கான ஜனநாயக விரோத நடவடிக்கையாகவே 20ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்துக்கு முடிவுகட்டி ஏதேச்சாதிகாரத்தை நோக்கி பயணிப்பதே அதன் நோக்கம்.எனவே, நாட்டிலுள்ள அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றுதிரட்டி ’20’ ஐ தோற்கடிப்பதற்கான ஜனநாயக போராட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே இருக்கின்றது. மக்கள் சக்தி ஊடாகவே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்பது மட்டும்அல்ல எமது நோக்கம், அதற்கு சமாந்தரமாக ’19 பிளஸ்’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும். நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான திட்டமே 19 பிளஸ் என்பது. 19 இல் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்திசெய்து அதனை இதன்மூலம் பலப்படுத்தமுடியும். 19 மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு போதுமாளனவு அதிகாரங்கள் கிடைக்கவில்லை. 19 பிளஸ் ஊடாக அவற்றை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் முன்வைக்கப்படும். தேசிய பாதுகாப்புக்கும் இதில் முன்னுரிமை வழங்கப்படும்.

அதேவேளை, ’20’ ஐ தோற்கடிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையில் நாம் இறங்கியுள்ள நிலையில் அது தொடர்பில் மாறுகட்ட கோணத்தில் விமர்சனங்களை முன்வைக்கலாம், திசை திருப்பும் நோக்கில் அறிவிப்புகளை விடுக்கலாம். எனவே, உள்நாட்டை மையப்படுத்தியே எமது நடவடிக்கைள் அமையும். கருத்தரங்குகள், விழிப்புணர்வுக் கூட்டங்கள் எல்லாம் நகர, கிராம மட்டங்களில் முன்னெடுக்கப்படும். அனைவரையும் எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles