அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எத்தகைய முடிவை எடுப்பார் என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
20 ஐ ஆதரித்திருந்தாலும் ஆளுங்கட்சியில் இணைவது தொடர்பான அறிவிப்பை அரவிந்தகுமார் எம்.பி. இன்னும் வெளியிடவில்லை. ஆளுந்தரப்பில் இருந்து அவருக்கு பதவிகள் எதுவும் வழங்கப்படவும் இல்லை. எதிர்காலத்தில் வழங்கப்படுமா என்பது பற்றியும் எதுவும் அறிவிக்கப்படவும் இல்லை.
எனவே, எதிரணியில் இருந்து 20 இற்காக அரசுக்கு ஆதரவு வழங்கியதுபோல, நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பின்போதும் அரவிந்தகுமார் எம்.பி. ஆதரவு வழங்கக்கூடும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
குறிப்பாக வாக்கெடுப்பில் அவர் பங்கேற்காமல் இருந்தால்கூட, ஆதரித்து வாக்களிக்கும் நிலைப்பாட்டை எடுக்கவே மாட்டார் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை, இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படாததாலும், மக்களின் பக்கம் நின்றும் பிரேரணைக்கு அரவிந்தகுமார் எம்.பி. ஆதரவு வழங்ககக்கூடும் எனவும் அவருக்கு நெருக்கமான சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.