’20’ சர்வாதிகாரத்துக்கு வழிகோலாது!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலமானது சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலாது – என்று இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின்போது 20 இல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் எதிரணி உறுப்பினர்கள் தவறான கண்ணோட்டத்துடன் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றனர். மேற்படி சட்டமூலத்தின் ஊடாக தனிநபர் ஒருவரிடம் அதிகாரங்கள் குவிக்கப்படவில்லை, மாறாக நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்வதற்காக நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்துவதற்கான அதிகாரங்களே வழங்கப்பட்டுள்ளன. இது ஏதேச்சாதிகாரத்துக்கு வழிகோலாது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் 30 அமைச்சர்களை நியமிக்கலாம் என்றபோதிலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் 16 பேரே நியமிக்கப்பட்டனர், தற்போதும் 25 பேர்தான் உள்ளனர். கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது, போதைப்பொருள் ஒழிக்கப்பட்டுவருகின்றது. எனவே, ஒழுக்கவிழுமியங்களுடன் செயற்படும் ஜனாதிபதி ஏசேச்சாதிகாரத்தை விரும்பமாட்டார்.

புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.அதற்கான பணி ஆரம்பமாகியுள்ளது. நிபுணர்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ” – என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

Related Articles

Latest Articles