அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஜனநாயக ஆட்சியை சவாலுக்குட்படுத்தும் விதத்திலேயே 20 முன்வைக்கப்பட்டுள்ளது என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
ஜே.வி.பியின் ஊடகவியலாளர் மாநாடு இன்று (4) முற்பகல் கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது ’20’ குறித்த ஜே.வி.பியின் நிலைப்பாடு அனுரகுமார திஸாநாயக்க அறிவித்தார்.
இதன்படி 20 ஐ எதிர்ப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். 19 இல் உள்ள குறைகளை நிவர்த்தி செய்திருக்கலாம், அதனை விடுத்து அதிகாரங்கள் யாவும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை தவறு எனவும் அவர் குறிப்பிட்டார்.