வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டை குடியுரிமை பெற்றவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் வாய்ப்பை உலகில் பல நாடுகள் தடுத்துள்ளன.
இதனால், புதிய திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் வாய்ப்பு வழங்கப்படுவதை ஏற்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார் என சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது சம்பந்தமாக எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து சுதந்திரக்கட்சியின் அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ’20’ தொடர்பில் ஆராய்வதற்காக சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு விரைவில் கூடவுள்ளது.