அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று (16) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை. அமைச்சர் சி.பி. ரத்னாயக்க இந்த தகவலை வெளியிட்டார்.
பேராசிரியர் ஜீ.எஸ்.பீரிஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட மேற்படி குழுவின் பரிந்துரை அறிக்கை பிரதமரிடம் நேற்று (16) கையளிக்கப்பட்டது. இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் இன்று அமைச்சரவைகூடியபோதும் ’20’ தொடர்பான பரிந்துரை அறிக்கை முன்வைக்கப்படவில்லை.